லண்டன் திரும்பிய விமானத்தில் திடீர் புகை: பயணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு
நேற்று மாலை லண்டன் திரும்பிய விமானம் ஒன்றில், திடீர் புகை ஏற்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் நோய்வாய்ப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மர்மப் புகை
பார்சிலோனாவிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு நேற்று மாலை 4.15 மணியளவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது.
அப்போது, திடீரென விமானத்துக்குள் ஏதோ புகை அல்லது ரசாயன ஆவி எழத் துவங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து பயணிகள் உடல் நலம் பாதிக்கப்படவே, ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
James Cheadle
குவிந்த தீயணைப்பு வீரர்கள்
உடனடியாக தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவிக்குழுவினரும் விமானத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால், அபாய அளவில் எந்த புகையும் கண்டுபிடிக்கப்படவில்லை என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
James Cheadle
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் மற்ற விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொலிசார் தொடர்ந்து இந்த மர்மப் புகை குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |