சுவிட்சர்லாந்தில் சிகரெட் விலையை அதிகப்படுத்த வேண்டும்: எழுந்த கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் சிகரெட் விலையை அதிகப்படுத்துவதால் இளைய சமூகத்தினர் அதை பயன்படுத்தாமல் ஒதுக்குவர்கள் என தெரிவிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தில் புகையிலை எதிர்ப்பு லாபியனது சிகரெட் பாக்கெட்டின் விலையை இருமடங்காக உயர்த்த அழைப்பு விடுத்துள்ளது. தற்போது 5.50 பிராங்குகள் தொகையில் விற்கப்படும் சிகரெட்டானது இருமடங்காக உயர்த்தப்பட வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
சராசரியாக 8 முதல் 14 பிராங்குகள் அதிகரிப்பால் தான் இளையோர் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடுவார்கள் என அவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சுவிட்சர்லாந்தில் சிகரெட்டுகள் ஏற்கனவே விலை உயர்ந்தவை தான்.
சுவிட்சர்லாந்தின் அண்டை நாடான பிரான்ஸ் மட்டுமே சிகரெட்டுக்கு அதிக விலை வைத்துள்ளது. சுவிட்சர்லாந்தை பொறுத்தமட்டில் ஆண்டுக்கு 9,500 பேர்கள் புகையிலை தொடர்பான பாதிப்பினால் மரணமடைகின்றனர்.
மேலும், ஆண்டுக்கு பல பில்லியன் பிராங்குகள் புகையிலை பாதிப்பால் ஏற்படும் சுகவீனத்திற்கு செலவிடப்படுகிறது. இருப்பினும் 15 வயதுக்கு மேற்பட்ட சுவிஸ் மக்களில் கால் பகுதியினர் புகைப்பிடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.