கடைசி போட்டியில் மும்பையை வீழ்த்திய RCB! ஸ்மிருதி மந்தனா சரவெடி ஆட்டம்
மகளிர் பிரீமியர் லீக்கின் தனது கடைசி போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
ஸ்மிருதி மந்தனா 53
மும்பையின் Brabourne மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் மேகனா 13 பந்துகளில் 26 ஓட்டங்கள் விளாசினார். அடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி கூட்டணி அதிரடியில் மிரட்டியது.
அணித்தலைவர் ஸ்மிருதி மந்தனா 37 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 36 ஓட்டங்களும், எல்லிஸ் பெர்ரி ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 49 ஓட்டங்களும் விளாசினர்.
கடைசி கட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய ஜார்ஜியா வார்ஹம் 10 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் விளாச, பெங்களூரு அணி 199 ஓட்டங்கள் குவித்தது.
Sabbineni Meghana came out swinging tonight! 🫨#WPL2025 | (@wplt20)
— Women’s CricZone (@WomensCricZone) March 11, 2025
pic.twitter.com/bgVtzKjOZU
ஆறுதல் வெற்றி
அதனைத் தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழக்க, நட் சிவர் ப்ரண்ட் சிக்ஸர், பவுண்டரி என தெறிக்கவிட்டார்.
எனினும் ஸ்னேக் ராணா, கிம் கார்த் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் 188 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
நட் சிவர் ப்ரண்ட் (Nat Sciver-Brunt) 35 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் விளாசினார். RCB அணி தொடரை விட்டு ஏற்கனவே வெளியேறினாலும், தமது கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |