ஆசியக்கிண்ண இறுதிப்போட்டி: இலங்கை அணிக்கு எதிராக 47 பந்தில் 60 ரன் விளாசிய ஸ்மிருதி மந்தனா
மகளிர் ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 60 ஓட்டங்கள் விளாசினார்.
தம்புள்ளையில் மகளிர் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ண இறுதிப்போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமாடியது. அதிரடியில் மிரட்டிய ஸ்மிருதி மந்தனா 26வது அரைசதம் விளாசினார்.
இதன்மூலம் டி20 அதிக அரைசதம் அடித்த இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். மேலும், 25 அரைசதங்கள் அடித்துள்ள அவுஸ்திரேலியாவின் பெத் மூனேவை முந்தியுள்ளார். மொத்தம் 47 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) 10 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
Fifty in a big Final game for Smriti Mandhana ? #CricketTwitter #INDvSL #WomensAsiaCup2024 pic.twitter.com/JSf0J3yaHn
— Female Cricket (@imfemalecricket) July 28, 2024
ரிச்சா கோஷ் (Richa Ghosh) 14 பந்துகளில் 30 ஓட்டங்களும், ஜெமிமா ரோட்ரிகாஸ் (Jemimah Rodrigues) 16 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாச, இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.