வாணவேடிக்கை காட்டிய ஸ்மிருதி மந்தனா பரிதாப ரன்அவுட்! முதல் அரைசதம் அடித்த பிரதிகா
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக அரைசதம் அடித்தார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட மந்தனா
மகளிர் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வதோதராவில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.
𝙒𝙝𝙚𝙧𝙚𝙫𝙚𝙧 𝙮𝙤𝙪 𝙗𝙤𝙬𝙡, 𝙞𝙩’𝙨 𝙝𝙚𝙖𝙙𝙞𝙣𝙜 𝙩𝙤 𝙩𝙝𝙚 𝙨𝙩𝙖𝙣𝙙𝙨 🚀
— JioCinema (@JioCinema) December 24, 2024
Watch Smriti Mandhana go all guns blazing in #INDvWI, LIVE NOW on #JioCinema & #Sports18! 👈#JioCinemaSports pic.twitter.com/fmfB0EYoQ4
அதிரடியில் மிரட்டிய ஸ்மிருதி மந்தனா சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதேபோல் பவுண்டரிகளை விரட்டிய பிரதிகாவும் அதிரடி காட்டினார்.
இதன்மூலம் இந்திய அணி விரைவாக 100 ஓட்டங்களை எட்டியது. மந்தனா தொடர்ச்சியாக 6வது அரைசதம் விளாசினார்.
ரன் அவுட்
அணியின் ஸ்கோர் 110 ஆக உயர்ந்தபோது, மந்தனா மற்றும் பிரதிகா இருவரும் ரன் எடுக்கும் முயற்சியில் குழம்பினர். இருவரும் ஒரே கிரீஸை நோக்கி ஓடியதில் மந்தனா ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தாலும், பிரதிகாவை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றார்.
ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) 47 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய பிரதிகா ராவல் (Pratika Rawal) தனது முதல் அரைசதத்தை விளாசினார்.
Wake up, score a half-century, go to sleep. 🤷🏻♀️
— Women’s CricZone (@WomensCricZone) December 24, 2024
Sixth consecutive fifty plus score for the sublime Smriti Mandhana! 🤯#INDvWI pic.twitter.com/8JQeWIppPz
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |