ருத்ரதாண்டவமாடிய ஸ்ம்ரிதி மந்தனா! அவுஸ்திரேலிய மண்ணிலேயே தொடரை கைப்பற்றிய மகளிர் படை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
ஸ்ம்ரிதி மந்தனா ருத்ரதாண்டவம்
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ருத்ரதாண்டவம் ஆடிய ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) 55 பந்துகளில் 82 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 8 பவுண்டரிகள்) விளாசினார்.
ஜெமிமா ரோட்ரிகஸ் (Jemimah Rodrigues) 46 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் விளாச, இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்தது.

தொடரை கைப்பற்றிய இந்தியா
இதன்மூலம் இந்திய அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஷலெய்க் கார்ட்னர் (Ashleigh Gardner) 45 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார்.

ஷ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ஸ்ரீசரணி தலா 3 விக்கெட்டுகளும், அருந்ததி ரெட்டி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |