மகளிர் கிரிக்கெட்டில் புதிய சரிதம் எழுதிய ஸ்மிரிதி மந்தனா! ஜாம்பவான் சாதனை முறியடிப்பு
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபார சாதனைகள் படைத்துள்ளார்.
ஸ்மிரிதி மந்தனா
மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சை தெரிவு செய்ய இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கி ஆடி வருகிறது.
அதிரடி ஆட்டத்தை துவங்கிய ஸ்மிரிதி மந்தனா (Smriti Mandhana) தனது 33வது அரைசதத்தை பதிவு செய்தார்.
முதல் இந்திய வீராங்கனை
இதன்மூலம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அதிகமுறை 50 ஓட்டங்களுக்கு மேல் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் ஜாம்பவான் வீராங்கனை மித்தாலி ராஜ் (Mithali Raj) 9 முறை அரைசதம் விளாசிய நிலையில், மந்தனா 10வது அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் ஓர் ஆண்டில் 1,000 ஓட்டங்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற புதிய வரலாற்றையும் மகளிர் கிரிக்கெட்டில் படைத்துள்ளார்.
🚨 SMRITI MANDHANA CREATES HISTORY 🚨
— Sportskeeda (@Sportskeeda) October 12, 2025
She becomes the first batter in women’s ODI history to complete 1,000 runs in a calendar year. 🇮🇳😍#Cricket #Smriti #CWC #Sportskeeda pic.twitter.com/nyPCgARDjV
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |