ஒரே இன்னிங்சில் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத்! 325 ரன் குவித்த இந்திய அணி
மகளிர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 325 ஓட்டங்கள் குவித்தது.
மிரட்டலான ஆட்டம்
மகளிர் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, இந்தியா முதலில் துடுப்பாடியது.
தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ஷஃபாலி வெர்மா 20 ஓட்டங்களும், ஹேமலதா 24 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
Smriti Mandhana produces another classic ? at the Chinnaswamy ??#INDvSA | (via @BCCIWomen)
— Women’s CricZone (@WomensCricZone) June 19, 2024
pic.twitter.com/gZjkG1WZ0p
அதிரடி கூட்டணி
அதன் பின்னர் அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா கூட்டணி அதிரடியில் மிரட்டியது.
பவுண்டரிகளை விரட்டிய ஸ்மிருதி மந்தனா சதம் விளாசினார். இது அவர் தொடர்ச்சியாக அடித்த இரண்டாவது சதம் ஆகும்.
120 பந்துகளை எதிர்கொண்ட அவர், 2 சிக்ஸர் மற்றும் 18 பவுண்டரிகளுடன் 136 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
136 (120) ?
— Women’s CricZone (@WomensCricZone) June 19, 2024
Smriti Mandhana's magnificent knock comes to an end. #INDvSA pic.twitter.com/bI7tM5w0Zj
87 பந்தில் சதம்
அடுத்து ஹர்மன்பிரீத் கவுர் 87 பந்தில் சதம் அடித்தார். ரிச்சா கோஷ் அதிரடியாக 13 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 325 ஓட்டங்கள் குவித்தது. ஹர்மன்பிரீத் 88 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் எடுத்தார்.
CAPTAIN THOR ?
— Women’s CricZone (@WomensCricZone) June 19, 2024
Harmanpreet Kaur got to her 6th ODI in supreme style, smashing 4️⃣, 6️⃣, 4️⃣#INDvSA | (via @BCCIWomen)pic.twitter.com/FlFV17nvOx
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |