தலையில் தாக்கிய பவுன்சர் பந்து - நிலைகுலைந்து போன இந்திய வீராங்கனை
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் பிரபல இந்திய வீராங்கனை ஸ்ம்ருதி மந்தனா காயம் காரணமாக வெளியேறினார்.
நியூசிலாந்தில் பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மார்ச் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டு 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இப்போட்டியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 12 ரன்கள் எடுத்திருந்தபோது தென்னாப்பிரிக்க வீராங்கனை சப்னிம் இஸ்மாயில் வீசிய பந்து அவரது தலையில் பயங்கரமாக தாக்கியது.
? UPDATE ?: Smriti Mandhana stable after being struck on the head in #CWC22 warm-up game. #TeamIndia
— BCCI Women (@BCCIWomen) February 28, 2022
Details ?
இதில் நிலைகுலைந்து போன மந்தனாவை பரிசோதனை செய்த இந்திய அணியின் மருத்துவ குழுவினர் தொடர்ந்து விளையாடாமல் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் மைதானத்தில் இருந்து வெளியேற கூறினர்.
இதனால் அவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ஸ்ம்ருதி மந்தனா கண்டிப்பாக முழு உடல் தகுதியோடு போட்டிகளில் பங்கேற்பார் என கிரிக்கெட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.