பல சாதனைகளை முறியடித்த ஸ்மிருதி மந்தனா - அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
india won hongkong qualifed for asia cup semifinal: ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய மகளிர் அணி, மகளிர் ஆசிய கிண்ண தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி, 124 ஓட்டங்கள் குவித்தார்.
194 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தோனேசியா, 16.2 ஓவர்களில் வெறும் 56 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 ஓவர்கள் வீசி, 9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஸ்மிருதி மந்தனா சாதனைகள்
இந்த போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஸ்மிருதி மந்தனா, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

124 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் மகளிர் டி20 ஆசிய கிண்ணத்தில் ஒரு வீராங்கனை பதிவு செய்த அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள் இதுவாகும்.
முன்னதாக இலங்கை வீராங்கனை சாமரி அதபத்து 119 ஓட்டங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது 18வது சதத்தை பதிவு செய்த ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவி மெக் லெனிங்கின் 17 சதங்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 வெவ்வேறு ஆண்டுகளில் தலா 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்த உலகின் முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இந்த ஆண்டில் 579 ஓட்டங்களும், 2018 ஆம் ஆண்டில் 622ஓட்டங்களும், 2022 ஆம் ஆண்டில் 594 ஓட்டங்களும் மற்றும் 2024 ஆம் ஆண்டில் 763 ஓட்டங்களும் குவித்துள்ளார்.
இந்த போட்டியில் 124 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 10,880 ஓட்டங்களைக் கடந்து, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
முன்னதாக இந்திய வீராங்கனை மிதாலி ராஜை 10868 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
மேலும், 2 டி20 சர்வதேச சதங்களை அடித்த ஒரே இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
நாளை(செப்டம்பர் 5 ஆம் திகதி) துபாயில், நடைபெற உள்ள போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |