சரவெடியாய் வெடித்த ஸ்மிரிதி மந்தனா! 50 பந்துகளில் சதமடித்து வரலாற்று சாதனை..தரமான பதிலடி
அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா 50 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
412 ஓட்டங்கள் இலக்கு
டெல்லியில் நடந்து வரும் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 412 ஓட்டங்கள் குவித்தது.
SMRITI MANDHANA ON FIRE TODAY.🔥 pic.twitter.com/DWBi5oSoZY
— DINESH ROY (@DINESHR9910) September 20, 2025
அதனைத் தொடர்ந்து இந்திய அணி களமிறங்கிய ஆடி வருகிறது. பிரதிகா ராவல் (10), ஹர்லீன் தியோல் (11) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் ஸ்மிரிதி மந்தனா ருத்ர தாண்டவம் ஆடினார்.
அதிவேக அரைசதம் விளாசி அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தார். அதன் பின்னர் வேகத்தை குறைக்காத ஸ்மிரிதி மந்தனா (Smriti மந்தனா) தான் எதிர்கொண்ட 50வது பந்தில் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார்.
முதல் இந்திய வீராங்கனை
இதன்மூலம் அதிவேக சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை மற்றும் சர்வதேச அளவில் இரண்டாவது வீராங்கனை எனும் சாதனையைப் படைத்தார்.
இதே போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனே 57 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அவரது சாதனையை சிலமணி நேரங்களிலேயே மந்தனா நொறுக்கிவிட்டார்.
Watch History in the Making,
— Female Cricket (@imfemalecricket) September 20, 2025
courtesy: Smriti Mandhana's madness in Delhi. ❤️#CricketTwitter #INDvAUS pic.twitter.com/G47DuswTUX
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |