சரவெடியாய் வெடித்த மந்தனா! மும்பையில் சிக்ஸர் மழை..சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி
மகளிர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா 187
இந்தியா - அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் மும்பை பட்டீல் மைதானத்தில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது. மூனி 54 பந்துகளில் 82 ஓட்டங்களும், டஹ்லியா மெக்ராத் 51 பந்துகளுக்கு 70 ஓட்டங்களும் விளாசினர்.
மந்தனா மிரட்டல் ஆட்டம்
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனா ருத்ர தாண்டவம் ஆடினார். மொத்தம் 49 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்கள் எடுத்தார்.
@BCCI
ஷஃபாலி வெர்மா 34 ஓட்டங்களும், ரிச்சா கோஷ் 26 ஓட்டங்களும் விளாச, இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டை ஆனது.
சூப்பர் ஓவர்
அதனைத் தொடர்ந்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதலில் ஆடிய இந்திய அணி மந்தனாவின் அதிரடியால், ஒரு விக்கெட்டுக்கு 20 ஓட்டங்கள் விளாசியது.
@BCCI
பின்னர் ஆடிய அவுஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 16 ஓட்டங்களே எடுத்து தோல்வியடைந்தது. சிறந்த வீராங்கனை விருதை மந்தனா பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான அடுத்தப் போட்டி 14ஆம் திகதி நடக்கிறது.
@Twitter/@BCCIWomen