ஒரு ஓவரில் 18 ரன் தேவை: சிக்ஸர், ஃபோர் அடித்து வெற்றி பெற்ற ஸ்மிரிதி மந்தனாவின் RCB
மகளிர் பிரீமியர் லீக் முதல் போட்டியில் RCB அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது.
சஜீவன் சஜனா 45 ஓட்டங்கள்
WPL எனும் மகளிர் பிரீமியர் லீக் 2026 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
𝐍𝐚𝐝𝐢𝐧𝐞 𝐝𝐞 𝐊𝐥𝐞𝐫𝐤'𝐬 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭. 𝐑𝐂𝐁'𝐬 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭. 🔥#CricketTwitterpic.twitter.com/zsaZHnOXUY
— Female Cricket (@imfemalecricket) January 9, 2026
முதலில் களமிறங்கிய மும்பை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் குவித்தது. சஜீவன் சஜனா 45 (25) ஓட்டங்களும், நிக்கோலா கேரி (Nicola Carey) 40 (29) ஓட்டங்களும் விளாசினர். நாடின் டி க்ளெர்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணியில் கிரேஸ் ஹாரிஸ் 25 (12) ஓட்டங்களும், மந்தனா 18 (13) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய ஹேமலதா (7), ரிச்சா (6), ராதா (1) ஆகியோர் சொதப்பினர். எனினும் நாடின் டி க்ளெர்க் (Nadine de Klerk) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
கடைசி பந்தில் வெற்றி
கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நட் சிவர் ப்ரண்ட் முதல் 2 பந்துகளை dot ஆக வீசினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
களத்தில் இருந்த க்ளெர்க் 3வது பந்தில் சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்துகளில் பவுண்டரி, சிக்ஸர், பவுண்டரி என விளாச, பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நாடின் டி க்ளெர்க் 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசினார். அருந்ததி ரெட்டி 20 ஓட்டங்கள் எடுத்தார்.
Image: WPLT20.Com/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |