பல்லேகேலேவில் அதிரடி! 25 ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்திய அணி
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் , இந்திய மகளிர் அணி 25 ஆண்டுகால சாதனையை முறியடித்தது.
பல்லேகேலேவில் இலங்கை-இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது.
இலங்கை அணி நிர்ணயித்த 174 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா 94 ஓட்டங்களும், ஷபாலி வெர்மா 71 ஓட்டங்களும் விளாசினார்.
.@TheShafaliVerma scored 71* in an unbeaten chase by India today.
— Women’s CricZone (@WomensCricZone) July 4, 2022
How good was she? ?⚡️#SLvIND pic.twitter.com/e7gERRCm9o
இந்த ஜோடி 25.4 ஓவர்களில் 174 ஓட்டங்கள் குவித்தது. இதன்மூலம் 25 ஆண்டுகால சாதனையை மந்தனா-ஷபாலி ஜோடி முறியடித்துள்ளது. இதற்கு முன்பு, 1997ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில், விக்கெட் இழப்பில்லாமல் 164 ஓட்டங்களை தொடக்க இணை குவித்தது தான் சாதனையாக இருந்தது.
23rd ODI half century!
— Women’s CricZone (@WomensCricZone) July 4, 2022
Back to the @mandhana_smriti we all know! ???#SLvIND pic.twitter.com/BHtKOqWffS
அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 164 ஓட்டங்கள் இலக்கை, அவுஸ்திரேலியாவின் ஜோன் பிராட்பெண்ட், பெலிண்டா கிளார்க் ஜோடி விக்கெட்டை இழக்காமல் எட்டி சாதனை படைத்தது.