பிரித்தானியாவிற்குள் 100 கிலோ போதைப்பொருளை கொண்டுவந்த நபர்: 22 ஆண்டுகள் சிறை
100 கிலோ கெட்டமைனை பிரித்தானியாவிற்குள் கொண்டுவந்த போதைப்பொருள் கடத்தல்காரர் சிறையில் அடைக்கப்பட்டார்.
2 மில்லியன் பவுண்டுகள்
ரஸ்ஸல் கிங் என்ற 63 வயது நபர், ரோட்டர்டாமில் இருந்து ஹல்லுக்கு படகு மூலம் வடக்குக் கடலைக் கடப்பதற்கு முன்பு, ஃபியட் மோட்டார் ஹோமிற்குள் உள்ள பெட்டிகளில் வகுப்பு B போதைப்பொருள் நிறைந்த நான்கு பைகளை சேமித்து வைத்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஆகத்து 24ஆம் திகதி, அன்று தனது வீட்டு முகவரிக்கு வந்தபோது, அதிகாரிகள் கெட்டமைனை மீட்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.
அதன் மதிப்பு 2 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு 70 கிலோ கஞ்சா இறக்குமதி மற்றும் விநியோகத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
632 கிலோ கெட்டமைன்
லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தில் ஆறு வார விசாரணைக்குப் பிறகு, 70 கிலோ கோகைனை இறக்குமதி செய்ததாக கிங் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
முன்னதாக விசாரணையில், பிரித்தானியாவிற்குள் 632 கிலோ கெட்டமைனை 2023ஆம் ஆண்டில் இறக்குமதி செய்வதில் கிங் முக்கிய பங்கு வகித்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், மோட்டார்ஹோம் குற்றத்திற்காக ரஸ்ஸல் கிங்கிற்கு 6 ஆண்டுகள் மற்றும் கஞ்சா குற்றத்திற்காக நான்கு ஆண்டுகள் உட்பட மொத்தம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |