புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவதற்குமுன் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடவேண்டும்... புலம்பெயர்ந்தோரை அவசரப்படுத்தும் கடத்தல்காரர்கள்

Asylum Seeker United Kingdom
By Balamanuvelan Aug 08, 2022 05:46 AM GMT
Report

பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவதற்குள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடவேண்டும் என கடத்தல்காரர்கள் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை அவசரப்படுத்திவருகிறார்கள்.

குறிப்பாக அல்பேனியா நாட்டிலிருந்து பிரித்தானியாவுக்கு வர விரும்பும் புலம்பெயர்ந்தோரை, முடிந்தவரை சீக்கிரமாக பிரித்தானியாவுக்குள் நுழைய அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுவிட்டால், ஆங்கிலக் கால்வாயில் அதிக அளவில் கடலோரக் காவல் படையினர் ரோந்து வரத்துவங்கி விடுவார்கள் என்றும், கடற்கரையில் வேலி அமைக்கப்படும் என்றும், அதனால், பணம் கொடுத்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோர் தங்கள் பணத்தை இழக்க நேரிடும் என்றும் கடத்தல்காரர்கள் அல்பேனியர்களை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், இப்போது பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோருக்கு கட்டண சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளதாம். முன்பு பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரிடம் ஆளுக்கு 10,000 பவுண்டுகள் வசூலித்துவந்த கடத்தல்காரர்கள், இப்போது 2,000 பவுண்டுகள் கொடுத்தால் போதும் என்று கூறியுள்ளார்களாம்.

புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவதற்குமுன் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடவேண்டும்... புலம்பெயர்ந்தோரை அவசரப்படுத்தும் கடத்தல்காரர்கள் | Smugglers Rushing Migrants

Credit: Reuters

இந்த சலுகை, படகில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்பவர்களுக்குத்தான். லொறிகளில் பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோருக்கோ ஆளுக்கு 22,000 பவுண்டுகள் வசூலிக்கப்படுகிறதாம்.ஏனென்றால், லொறிகளில் பயணிக்கும்போது அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ளும் அபாயம் அதிகம் என்பதால், லொறிகளில் பயணிக்க அதிக தொகையாம்.

ஆக, எப்படியும் உடனடியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலுங்கள், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் பிரித்தானியாவுக்குச் செல்லும் ஆசையில் மண் விழுந்துவிடும் என, கூவி அழைக்காத குறையாக கடத்தல்காரர்கள் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் செல்வதற்காக அழைத்துவருகிறார்களாம்.  

புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவதற்குமுன் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடவேண்டும்... புலம்பெயர்ந்தோரை அவசரப்படுத்தும் கடத்தல்காரர்கள் | Smugglers Rushing Migrants

Credit: Reuters

புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவதற்குமுன் பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடவேண்டும்... புலம்பெயர்ந்தோரை அவசரப்படுத்தும் கடத்தல்காரர்கள் | Smugglers Rushing Migrants

Credit: AFP

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US