லொறியில் புலம்பெயர் மக்களை கடத்திய விவகாரம்: லண்டன் வாசிகள் இருவருக்கு சிறை
பிரித்தானியாவுக்குள் சிறார்கள் உட்பட புலம்பெயர் மக்களை கடத்தி வந்த குற்றத்திற்காக கிழக்கு லண்டனை சேர்ந்த இருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று வழக்குகளில் குற்றவாளிகள்
கடந்த 2021ல் முன்னெடுக்கப்பட்ட இந்த விசாரணையில், 38 வயதான நஜீப் கான் மற்றும் 40 வயதான வக்காஸ் இக்ராம் ஆகியோர் 2021 மார்ச் மாதம் கைதாகினர். இருவரும் தலா மூன்று வழக்குகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர்.
@mylondon
இதில் இக்ராம் கையும் களவுமாக சிக்கிய நிலையில், அவரிடம் இருந்து அலைபேசியை பறித்ததுடன், புலம்பெயர் மக்களிடம் இருந்து தலா 7,000 பவுண்டுகள் கட்டணமாக வசூலித்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்தது.
கைதாகும் வரையில், இக்ராம் புலம்பெயர் மக்களை பிரித்தானியாவுக்குள் கடத்திவரும் ரகசிய குழு ஒன்றில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். இந்த குழுவுக்கு முஹம்மது முக்தார் ஹுசைன் என்பவர் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.
ஆனால் ஹுசைன் பின்னர் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றார். இக்ராம் மற்றும் கான் முன்னெடுத்த கடத்தல் விவகாரத்தில், இரு முறை பொலிசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது, மூன்று முறை வெற்றி பெற்றுள்ளனர் என அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
சிறையில் அடைக்கப்படுவார்கள்
இதில் மே மாதம் 2019ல், ஹாலந்தில் ஒரு லொரியில் 15 வியட்நாமியரும் ஒரு ஆப்கானிய குடியேறியும் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் ஹார்விச்சிற்கு புறப்படும் நோக்கில் ஒரு படகில் ஏறத் தயார் நிலையில் இருந்துள்ளனர்.
@mylondon
ஆகஸ்டு மாதத்தில் 16 சிறார்கள் உட்பட 16 புலம்பெயர் மக்கள் லொறி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டனர். பலர் மூச்சுவிட முடியாமல் திணறிய நிலையில் அப்போது மீட்கப்பட்டனர்.
இந்த இரண்டு சம்பவத்திலும் தொடர்புடைய லொறி சாரதிகள் பின்னர் நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |