உடல் எடையை சட்டுன்னு குறைக்க உதவும் Snacks: என்னென்ன தெரியுமா?
உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் இடையில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடையை குறைப்பதற்கு பெரும்பாலும் மாத்திரை மருந்துகளை உண்டு உடல் எடையை குறைக்க நினைக்கிறார்கள்.
ஆனால் அன்றாட வாழ்வில் உண்ணும் Snacks களிலே சத்தானதாக எடுத்துக்கொண்டால் உடல் எடை வேகமாக குறையும்.
அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் Snacks வகைகளை பற்றி பார்க்கலாம்.
கொண்டைக்கடலை வேகவைத்த கொண்டைக்கடலையில் புரதம் நிறைந்துள்ளது, இது எடை இழப்புக்கு ஏற்றது. வேகவைத்த கொண்டைக்கடலை உடலுக்கு மிகவும் நல்லது.
சக்கரவள்ளி கிழங்கு சக்கரவள்ளி கிழங்கை வேக வைத்து சாப்பிட்டால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
கிரீன் டீ பெண்களுக்கு கிரீன் டீ தரும் நன்மைகள் ஏராளம். அதனுடன் சேர்த்து உடல் எடையை குறைக்க கிரீன் டீ உதவுகிறது.
சாலட் பழங்கள் மற்றும் காய்கறிகளை நறுக்கி அதில் எலுமிச்சை சாறு பிழிந்து சாலட்டாக சாப்பிட்டு வர உடல் எடையை குறைக்கலாம்.
விதைகள் உடல் எடையை குறைக்க பூசணி விதை, ஆளி விதை, சூரிய காந்தி விதை ஆகியவற்றை வறுத்து சாப்பிடலாம்.
சூப் உடல் எடையை குறைக்க மாலை நேரத்தில் காய்கறி சூப் குடிப்பது மிகவும் பயன் தரும்.
பயிர்கள் முளைக்கட்டிய பயிர்களாக சாப்பிட்டு வர விரைவில் உடல் எடை ஈஸியாக குறையும்.
வேர்க்கடலை வேர்க்கடலையை வேக வைத்து சாப்பிட்டு வர உடல் எடையை குறைக்கலாம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
சோளம் சோளத்தை வேக வைத்து சாப்பிட்டு வர உடல் எடையை குறைக்க முடியும். இது பசியை கட்டுப்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |