மூன்றாண்டு தொடர்ச்சியாக தூங்கும் நத்தைகள்! சுவாரஸ்ய தகவல்
நத்தை என்பது மிகவும் சிறிய மெதுவாக நகர கூடிய உயிரினங்களின் ஒன்று.
நத்தையில் கடல் நத்தை, தரை நத்தை, நன்னீர் நத்தை என்பவற்றைக் குறிப்பிடப் பொதுவாகப் பயன்படும். ஓடிலாத நத்தை வகைகளும் காணப்படுகின்றன.
இது தொடர்ந்து மூன்று வருடங்கள் வரை உறங்கும் என்று சொல்லப்படுகின்றது. தற்போது நத்தைகள் ஏன் இப்படி உறங்குகின்றது?காரணம் என்ன என்று இங்கு தெரிந்து கொள்வோம்.
ஏன் இவ்வளவு நேரம் தூங்குகின்றன?
மெதுவாக நகர்வதில் பேர்போன நத்தை, உயிர் வாழ்வதற்கு ஈரப்பதமான சூழ்நிலை தேவை. இதற்காக அவை இயற்கையிலே ஈரப்பதத்தினைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டுள்ளன. எனவே இயற்கையான வானிலை சூழ்நிலையை பொறுத்து , அவை மூன்று ஆண்டுகள் வரை தூங்கலாம்.
சில நத்தைகள் பகல் முழுவதும் உறங்கிவிட்டு இரவில் மட்டும் புத்துணர்ச்சியுடன் நடமாடுகின்றன. இதிலும் ஒரு சில நத்தைகள், சில ஆண்டுகாலம் மட்டுமே உயிர்வாழும். சுற்றுப்புறத்திலுள்ள குளிர்ச்சியான அல்லது வெப்பமான சூழ்நிலைகளைப் பொறுத்து ஒரு சில வகையான நத்தைகள் நீண்ட காலம் வரை தூங்குகின்றன.
மேலும் நத்தைகள் வறண்ட, வெப்பமான காலநிலையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களின் உடலில் சளியை சுரக்கும். இவை மூன்று வருடங்கள் தங்கள் சளியில் தூங்குவதில்லை.
வானிலை சரியாக இருக்கும்போது, நத்தைகள் ஒரு வழக்கமான தூக்க அட்டவணையைப் பின்பற்றுகின்றன. மனிதர்களைப் போல் நத்தைகள் இரவு மற்றும் பகல் விதிகளுக்கு கட்டுப்படுவதில்லை.
பொதுவாக நத்தைகள் ஒவ்வொரு 13 முதல் 15 மணிநேர இடைவெளியில் தூங்குகின்றன. இந்த தூக்கத்தில் கிடைத்த ஆற்றலில் அடுத்த 15 மணி நேரங்கள் வேலை செய்து திரும்பவும் தூங்குகின்றன.
ஒரு நத்தை தூங்குவதை எப்படி கண்டுபிடிக்க முடியும்?
ஒரு நத்தை தூங்குகிறதா இல்லையா என்பதை அறிய அவற்றின் ஷெல் அவர்களின் உடலில் இருந்து சற்று விலகி இருக்கலாம். மேலும் கால்கள் அசையாமல் இருக்கும்.
ஒருசில நத்தைகளை பார்கும் போது அவை இறந்து இருப்பதை போல தோன்றும். உண்மையில் ஒரு அசையாத நத்தையை பார்த்தால் அது இறந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அது ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளது என்று தான் அர்த்தம்.
அதிலும் சில பாலைவன நத்தைகள் தரைக்கடியில் குழி தோண்டி அதில் மூன்று வருடங்கள் வரை கூட தூங்குகின்றன. இத்தகைய உயிரினங்கள் 15 ஆண்டுகள் வரை கூட வாழும் திறன் படைத்தவை.