தன்னை கடித்த பாம்பை மீண்டும் கடித்த நபர் - பறிபோன பாம்பின் உயிர், தப்பிய 35 வயது நபர்!
பீகார் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை மீண்டும் இரண்டு முறை ஒரு நபர் கடித்த அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை கடித்த பாம்பை மீண்டும் கடித்த நபர்
பீகார் மாநிலம் நவாடாவில் ரயில் பாதை அமைக்கும் பணியில் வேலை செய்துக்கொண்டிருந்த 35 வயதுடைய நபர், அடிவார முகாமில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
அதன் போது பாம்பு அவரை கடித்துள்ளது. தப்பியோடுவதற்கு பதிலாக பழங்கால நம்பிக்கையை வைத்து, பாம்பின் விஷத்தை நடுநிலையாக்கும் வகையில் இரண்டு முறை பாம்பை கடித்துள்ளார்.
சம்பவம் நிகழ்ந்த பகுதியானது மூடநம்பிக்கையால் மூழ்கப்பட்டுள்ள பகுதியாகும். பாம்பை கடித்து, இறுதியில் அதை கொலை செய்துள்ளார்.
மேலும் பலர் இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குறித்த நபர் உயிருடன் இருக்கும் வேளையில் பாம்பு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |