விஷமுள்ள பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு ரீல்ஸ் எடுத்த பாம்புபிடி வீரர் மரணம்
விஷமுள்ள பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு ரீல்ஸ் எடுத்த பாம்புபிடி வீரர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.
பாம்புபிடி வீரர் மரணம்
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, குணால் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் மஹாவர் (வயது 42). இவர் பல்வேறு பகுதிகளில் பாம்புகளை பிடித்து அனுபவம் உள்ளவர்.
இதையடுத்து, பர்பத்புரா கிராமத்தில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் விஷமுள்ள பாம்பு பதுங்கி இருப்பதாகவும், அதனை பிடிக்க வேண்டும் என்றும் பாம்புபிடி வீரர் தீபக் மஹாவருக்கு அழைப்பு வந்தது.
இதனால், அங்கு சென்ற அவர் பாம்பை லாவகமாக பிடித்தார். அந்த நேரத்தில் பள்ளியில் படிக்கும் அவருடைய மகனை அழைத்துவருமாறு அவருக்கு போனில் கூறியுள்ளனர்.
பின்னர், அவர் விஷமுள்ள பாம்பை தனது கழுத்தில் சுற்றிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தனது மகன் படிக்கும் பள்ளிக்கு சென்றார். அப்போது, ரீல்ஸ் எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
பின்னர், மகனை அழைத்துக்கொண்டு வரும் வழியில் தீபக் மஹாவரின் கையில் அந்த பாம்பு கடித்துவிட்டது. இதில் அவரது உடலில் உடனடியாக விஷம் ஏறியது.
இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |