விவசாயி வீட்டிற்குள் புகுந்து தொட்டிக்குள் 30 குட்டிகளை ஈன்ற கொடிய விஷ நாகம்! பின்னர் நடந்த சம்பவம்
தமிழகத்தில் நபர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷப்பாம்பு அங்கேயே 30 குட்டிகளை ஈன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கூத்தபூண்டியைச் சேர்ந்த விவசாயி சந்திரமோகன் (43) இவர் வீட்டிற்குள் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
அதனைப் பார்த்து அதிர்ந்த சந்திரமோகன் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து வனத்துறையினர் அங்கு வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அந்த பாம்பானது தொட்டிக்குள் 30 குட்டிகளை ஈன்றுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், குட்டிகளுடன் கண்ணாடி விரியன் பாம்பை மீட்டனர்.
பின்னர் 30 குட்டிகளுடன் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.