தரையில் படுத்திருந்த சிறுமியின் கழுத்தை 2 மணி நேரம் சுற்றிய பாம்பு! பின்னர் நடந்த நம்ப முடியாத ஆச்சரியம்... பதைபதைக்கும் வீடியோ காட்சி
இந்தியாவில் 6 வயது சிறுமியின் கழுத்தை பாம்பு 2 மணி நேரம் சுற்றி கொண்டிருந்ததோடு சிறுமியை கடித்த நிலையிலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த புர்வா கடாரி என்ற 6 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டில் படுத்திருந்த போது அவர் தலை அருகே ஒரு பாம்பு வந்த நின்றது. பின்னர் இரண்டு மணி நேரம் சிறுமியின் கழுத்தை சுற்றியே பாம்பானது இருந்தது.
இதை பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர், ஆனாலும் சிறுமி அசைந்தால் பாம்பு எதாவது செய்துவிடும் என்பதால் பாம்பு பிடிப்பவர் வரும் வரையில் அப்படியே அசையாமல் இருக்கும்படி குடும்பத்தார் அவளிடம் கூறினார்.
இரண்டு மணி நேரம் கழித்து பாம்பு அங்கிருந்து நகர தொடங்கிய போது சிறுமியும் உடலை அசைத்தாள், அப்போது சிறுமி கையில் கொத்திவிட்டு பாம்பு அங்கிருந்து நகர்ந்து சென்றது.
இதையடுத்து உடனடியாக சிறுமியை மீட்ட குடும்பத்தார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர், இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் சிறுமியின் உடல்நலம் எப்படியிருக்கிறது என பலரும் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போதைய தகவலின்படி சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் எனவும், அவர் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரியவந்துள்ளது, பாம்பானது 2 மணி நேரம் சிறுமியின் கழுத்தை சுற்றி கொண்டு அவர் கையில் கொத்திய நிலையிலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்து கொண்டது அதிசயமான விடயம் தான் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        