டாய்லெட்டில் பாம்புகளா... எல்லாம் பொய் என்கிறார் இந்த கனேடியர்: ஒரு சுவாரஸ்ய செய்தி
அவுஸ்திரேலியாவில், அவ்வப்போது, டாய்லெட்டுக்குள் திடீரென பாம்பு வந்துவிட்டது, டாய்லெட்டில் உட்காரும்போது பின்பக்கத்தைக் கடித்துவிட்டது, ஜன்னலிலிருந்து பாம்பு தொங்கிக்கொண்டிருந்தது, என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டே இருக்கும்.
தினமும் குறைந்தது ஒரு பாம்பு குறித்த செய்தியாவது வந்துவிடும். நமக்கெல்லாம் அதைப் படிக்கும்போது, என்னடா, வீட்டுக்குள் பாம்பு, காருக்குள் சிலந்தி, தோட்டத்தில் முதலை என நாடே காடு மாதிரி இருக்கிறதே என்றுதான் தோன்றும்.
ஆனால், அவையெல்லம் பொய் என்கிறார் அவுஸ்திரேலியாவில் வாழும் கனேடியர் ஒருவர். கனடாவிலிருந்து நியூ சவுத் வேல்ஸிலுள்ள, சென்ட்ரல் கோஸ்ட் என்ற பகுதிக்கு 2013இல் குடிபெயர்ந்தவர் Paul Ferrante.
எட்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வாழ்கிறேன், டாய்லெட்டுக்குள் ஒரு முறை கூட, ஒரு பாம்பைக்கூட பார்த்ததில்லை என்கிறார் அவர்.
இதுபோக, அவுஸ்திரேலியாவில் மனிதனைக் கொல்லும் கோலா கரடி ஒன்று இருப்பதாக அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு காலம் காலமாக கதை சொல்லப்படுவதுண்டு. ஆனால், இவையெல்லாம் பொய்கள் என்கிறார் Ferrante.
@paul_ferrante I was promised toilet snakes #australia #deadlyanimals #travel
♬ original sound - Paul Ferrante
வாழ்க்கை முழுவதும் பொய்களாக சொல்லி உங்களை நன்றாக ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் என தான் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியுள்ளார் Ferrante.
ஆனால், அவர் சிட்னிக்கு அருகில் இருக்கிறார். நகர்ப்புறங்களில் அந்த பிரச்சினை எல்லாம் கிடையாது. நான் வட குயின்ஸ்லாந்தில் இருக்கிறேன், அவை எல்லாமே இங்கே இருக்கிறது என்கிறார் அவுஸ்திரேலிய பெண் ஒருவர். யார் சொல்வதை நம்புவது என்றே புரியவில்லை!