ஜாக்கெட் மற்றும் பேண்ட் பாக்கெட்டில் வைத்து 9 பாம்புகள், 43 பல்லிகள் கடத்தல்! அதிர்ந்து போன பொலிசார்
அமெரிக்காவில் ஊர்வனங்களை வித்தியாசமான முறையில் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் யசிட்ரோ எல்லையில் பொலிசார் வாகனங்களை சோதனை செய்து வந்தனர். டிரக்கில் இருந்த நபரை பொலிசார் வெளியேறச் சொல்லி சோதனை செய்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
பாம்புகள் மற்றும் பல்லிகள்
காரணம் அந்த நபர் அணிந்திருந்த ஜாக்கெட், பேண்ட் பாக்கெட்டுகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் சுமார் 52 பையில் அடைக்கப்பட்டிருந்த 9 பாம்புகள், அரிய வகை 43 கொம்பு பல்லிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது மற்றும் விசாரணை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தியதில், இந்த ஊர்வனங்களை அமெரிக்காவிற்குள் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஊர்வனங்களை கடத்த முயன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.