ஒரு முறை அணிந்த ஆடையை மீண்டும் அணியாத தமிழ் பட நடிகை.., யார் தெரியுமா?
தமிழ் பட நடிகை ஒருவர், ஒரு முறை அணிந்த ஆடையை மறுமுறை அணியக்கூடாது என்பவற்றை கடைபிடித்து வருகிறாராம்.
அவர் புன்னகை அரசி சினேகா தான். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.
இவரின் இயற்பெயர் சுஹாசினி, சினிமாவுக்காக தன் பெயரை சினேகா என மாற்றிக் கொண்டார்.
இவருக்கு சினிமாவில் முதல் திருப்புமுனையை லிங்குசாமி இயக்கிய படம் ஆனந்தம்.
ஆனந்தம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை சினேகாவுக்கு விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
உச்ச நடிகையாக வலம் வந்தபோதே நடிகர் பிரசன்னா மீது காதல் வயப்பட்ட சினேகா, அவரை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த ஜோடிக்கு விஹான் என்கிற மகனும், ஆத்யந்தா என்கிற மகளும் இருக்கிறார்கள்.
திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் சினிமாவில் நடித்து வரும் சினேகா, அண்மையில் விஜய்யின் கோட் படத்தில் நடித்திருந்தார்.
இதுதவிர சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வரும் சினேகா, சொந்தமாக துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
சினேகாலயா என பெயரிடப்பட்டுள்ள அந்த துணிக்கடை சென்னை தி நகரில் இயங்கி வருகிறது. துணிக்கடையே நடத்தி வரும் சினேகா ஒருமுறை அணிந்த ஆடையை மறுமுறை அணியமாட்டாராம்.
அதன்படி, சினேகா ஒரு முறை தொடர்ந்து ஒரே ஆடையை அணிந்து வந்ததை பார்த்து அவர் கிட்ட வேற ஆடையே கிடையாதா என பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார்கள்.
அதனால் அன்றிலிருந்து இனி ஒருமுறை போட்ட ஆடையை மறுபடியும் அணியக்கூடாது என முடிவெடுத்து அதை தொடர்ந்து செய்து வருகிறார்.
ஆடைகளை வைத்து தன்னுடைய கப்போர்டு பெரிதாகிக் கொண்டே செல்வதாக சினேகா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |