பிக்பாஸ் புகழ் சினேகனுக்கு திருமணம்! தன்னை விட 16 வயது குறைவான நடிகையை மணந்தார்... வெளியான வீடியோ
பிக்பாஸ் புகழ் நடிகர் சினேகனுக்கும், கன்னிகா ரவி என்ற நடிகைக்கும் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் இன்று திருமணம் நடந்தது.
43 வயதான சினேகன் தமிழ் திரைப்படங்கள் பலவற்றுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இதோடு யோகி, உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சினேகன் பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
இவரும் கன்னிகா ரவி (27) என்ற நடிகையும் எட்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் தலைமையில் இன்று சினேகன் கன்னிகா ரவி திருமணம் நடந்தது.
சினேகன் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி செயலாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் திருமணம் நடத்தி வைத்த வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
நம்மவர் மக்கள் பெருந்தலைவர் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களின் தலைமையில் கவிஞர் சினேகன் கன்னிகா திருமணம் இனிதே சிறப்புற நடைபெற்றது.#சினேகன் ❤️ #கன்னிகா pic.twitter.com/nZx2I2Hevq
— கார்த்திக் (𝔾𝕒𝕟𝕕𝕙𝕚'𝕤 𝔹 𝕋𝕖𝕒𝕞) (@Giriellary) July 29, 2021