பிரித்தானிய ஹொட்டல்கள், வீடுகளில் சோதனையிட மோப்ப நாய்களுக்கு அழைப்பு: காரணம் இதுதான்
பிரித்தானியாவில், மோப்ப நாய்களை வைத்திருப்போருக்கு ஹொட்டல்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம்.
காரணம் இதுதான்
மோப்ப நாய் வைத்திருப்பவர்களுக்கு அழைப்புகள் அதிகரித்துள்ளதற்குக் காரணம் குற்றச் செயல்கள் என்று எண்ணிவிடவேண்டாம்.
எல்லாம் இந்த மூட்டைப்பூச்சித் தொல்லைதானாம்!
Photograph: Georges Gobet/AFP/Getty Images
அதாவது, பிரான்சில் மூட்டைப்பூச்சித் தொல்லை என செய்திகளும் வீடியோக்களும் பரவத் துவங்க, பிரித்தானியர்களுக்கும் பயம் வந்துவிட்டது.
அதுவும், ஒரு இடத்தில் மூட்டைப்பூச்சி என்றாலே, அந்த இடம் சுத்தமில்லை என்பதுபோல ஒரு கருத்து வேறு நிலவுவதால், தங்கள் தொழில் பாதிக்கப்படுமோ என ஹொட்டல்காரர்கள் பயப்படத் துவங்கிவிட்டார்கள்.
Yahoo News UK
இதற்கிடையில், லண்டன் போன்ற நகரங்களில் பொதுப் போக்குவரத்து சாதனங்களில் மூட்டைப்பூச்சிகள் குறித்த வீடியோக்கள் செய்திகள் என ஊடகங்கள் ஏற்படுத்திய பரபரப்பு வீடுகளையும் தொற்றிக்கொண்டுள்ளதால், தங்கள் வீடுகளில் மூட்டைப்பூச்சிப் பிரச்சினை இருக்குமோ என பொதுமக்களும் பயப்படத் துவங்க, மூட்டைப்பூச்சிகளைக் கண்டறியும் திறன் கொண்ட மோப்ப நாய்களுக்கு பிரித்தானியாவில் மவுசு அதிகமாகிவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |