குறட்டை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா?
Ginger
Milk
2 மாதங்கள் முன்
குறட்டை விடுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், உடன் தூங்குபவர்களின் குறட்டையால் பலரும் தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள்.
தூங்கும் நேரத்தில் அருகில் ஒருவர் குறட்டை விட்டால் அது எரிச்சலாகவும் வெறுப்பாகவும் இருக்கும்.
இதனை இயற்கைமுறையில் கூட போக்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- ஒரு டம்ளர் நீரில் 2 துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் அந்நீரால் இரவில் தூங்கும் முன் வாயைக் கொப்பளியுங்கள். வேண்டுமானால் இரவில் படுக்கும் முன் புதினா எண்ணெயை நன்கு சுவாசித்துக் கொள்ளுங்கள். இதனாலும் குறட்டையைத் தவிர்க்கலாம்.
- தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலை 2 துளி சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் தேன் கலந்தும் சாப்பிடலாம்.
- ஒரு பெரிய பௌலில் சுடுநீரை நிரப்பிக் கொள்ளுங்கள். பின் அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்பு அந்நீரில் ஆவி பிடியுங்கள். இப்படி தினமும் செய்தால், குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
- ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நெய்யை, மூக்கின் இரண்டு துவாரங்களிலும் விடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்தால், குறட்டையில் இருந்து விடுபடலாம்.
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவில் தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடியுங்கள்.
- ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள். இந்த பாலை தினமும் இரவில் படுக்கும் முன் குடித்தால், குறட்டை பிரச்சனை நீங்கும்.
- ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த நெட்டில் இலைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டிக் குடியுங்கள்.
- குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட, 1-2 பூண்டு பற்களை சாப்பிட்டு, ஒரு டம்ளர் நீரைக் குடியுங்கள்.
- 1 டேபிள் ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவில் தூங்குவதற்கு முன் குடித்து வாருங்கள். இதனால் மெதுவாக குறட்டை பிரச்சனை குறைந்திருப்பதைக் காணலாம்.
- ஒரு கப் சுடுநீரில் சிறிது சீமைச்சாமந்தி பூக்கள் அல்லது சீமைச்சாமந்தி டீ பேக்குகளை வைத்து 10 நிமிடம் ஊற வையுங்கள். பின் அதை வடிகட்டி, தினமும் இரவில் படுக்கும் முன் குடியுங்கள்.
- வெந்தயத்தை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, இரவில் படுக்கும் முன் நீருடன் விதைகளை சாப்பிடுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் குறட்டைப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
- இரவில் படுக்கும் முன் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயிலை சில நிமிடங்கள் நுகர்ந்து வாருங்கள். இப்படி செய்வதால், அந்த நறுமணத்தால் சுவாசப் பாதையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, குறட்டை தடுக்கப்படும்.
- ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது சேஜ் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, பின் அந்நீரால் ஆவி பிடியுங்கள்.
- கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு இறக்கி வடிகட்டி தேன் கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடியுங்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US