சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்களில் திடீரென ஆரஞ்சு நிறமாக மாறிய பனி... செவ்வாய்க்கிரகமோ என வியக்க வைத்த காட்சி
சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்களில் பனி திடீரென ஆரஞ்சு நிறமாக மாறியதால் மக்கள் வியப்பிலாழ்ந்தனர்.
சுவிட்சர்லாந்திலுள்ள Val Ferret என்ற பகுதியிலுள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டிலுள்ள பனி, நிறம் மாறியதுடன், வானமும் அச்சமூட்டும் வகையில் மஞ்சள் நிறமாக மாறியது.
இந்த ஆரஞ்சு நிற பனிக்கு காரணம் ஆபிரிக்காவில் வீசும் காற்று என தெரியவந்துள்ளது.
அந்த காற்று, ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து மணலை அள்ளிக்கொண்டு ஐரோப்பா வழியாக பயணிப்பதால், பனியும் வானமும் இப்படி ஆரஞ்சு நிறமாக மாறுவதாக வானிலை ஆராய்ச்சி மையம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த நிற மாற்றம், சுவிட்சர்லாந்தில் மட்டுமல்லாது, இத்தாலி மற்றும் பிரான்சிலும் காணப்பட்டுள்ளது.
திடீரென வானமும் பனியும் ஆரஞ்சு நிறத்தில் மாறி பயத்தை ஏற்படுத்திய நிலையிலும், சிலர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பனிச்சறுக்குக்கு சென்றதையும்வெளியான புகைப்படங்களில் காண முடிகிறது.