அதிகளவில் பனிப்பொழிவு! பிரித்தானியாவில் பெரும்பாலான பள்ளிகள் மூடல்
பிரித்தானியாவில் வாரயிறுதி நாட்களில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் திங்களன்று(டிசம்பர் 4,2023) பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
வானிலை மையத்தின் அம்பர் எச்சரிக்கையை தொடர்ந்து இன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ஏற்கனவே 17 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக cumbriaவில் அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் மற்றும் நாட்டின் வடகிழக்கு பகுதிகளிலும் பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
Image: Tom Maddick SWNS
மேலும் பெற்றோர்கள் உள்ளூர் கவுன்சில் அல்லது பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெறவும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
cumbriaவின் சாலைகளில் சனிக்கிழமை மாலையே அதீத பனிப்பொழிவின் காரணமாக பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
North West
Hawkshead Esthwaite Primary School
Broughton CofE School
Ghyllside Primary School
St Mark's CofE Primary School
Our Lady of the Rosary Catholic Primary School
Vicarage Park CofE Primary School
St Cuthbert's Catholic Primary School
Coniston CofE Primary School
St Martin and St Mary CofE Primary School
John Ruskin School
Langdale CofE School
Crosscrake CofE Primary School
Dean Gibson Catholic Primary School
Ulverston Victoria High School
The Lakes School
Kirkbie Kendal School
Pennington CofE School
Staveley CofE Primary School
North East
Aycliffe Village Primary School
Wingate Primary School
Wales
Ysgol y Mynydd Du