தூங்கும் முன் இரவில் நெல்லிக்காய் பொடி சாப்பிடலாமா?
நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
மாதுளையை விட நெல்லிக்காயில் 27 சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. அதாவது, நெல்லிக்காயில், ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன.
நெல்லிக்காயின் நன்மைகள்
* நமது உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.
* முக்கியமாக ஆண்களின் ஆற்றலை அதிகரிப்பதற்கு நெல்லிக்காய் உதவுகிறது.
* இதய நோய் மற்றும் நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு நெல்லிக்காய் முக்கிய அங்கமாக இருக்கிறது.
* நெல்லிக்காய் சாப்பிட்டால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பது மட்டுமல்லாமல் நினைவாற்றலும் அதிகரிக்கும்.
* நமது முடிக்கு சரியான ஊட்டச்சத்தை நெல்லிக்காய் கொடுக்கிறது. பொடுகு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நெல்லிக்காய் சாப்பிட்டால் விடுபடலாம்.
* தோலில் உள்ள புள்ளிகள் மற்றும் வயது சுருக்கங்களை தடுக்கவும் நெல்லிக்காய் உதவுகிறது.
* நெல்லிக்காயை அரைத்து மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் கலந்து உடலில் தேய்த்து குளித்தால் சருமம் இயற்கையாகவே அழகாக மாறும்.
* அமிலத்தன்மை நிரந்தரமாக நீங்க வேண்டுமென்றால், இரவு உணவு முடித்த பிறகு ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |