34 ஆண்டுகளில்... பேய் மழையால் தத்தளிக்கும் சுவிட்சர்லாந்தின் முக்கிய பகுதிகள்
சுவிட்சர்லாந்தில் கடந்த பல நாட்களாக பெய்த கனமழையால் நாட்டின் முக்கிய பகுதிகள் பல தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சில பகுதிகளில் சதுர மீற்றருக்கு 100 லிற்றர் மழை பெய்துள்ளது. Faido பகுதியில் இந்த அளவு 180 லிற்றர் என தெரிய வந்துள்ளது. ஆனால் கடந்த 1987கு பிறகு இது இரண்டாவது பெரிய மழை அழவு என கூறப்படுகிறது.
1987 ஜூலை மாதம் தொடர்ந்து 3 நாட்கள் பெய்த மழையின் அளவு சதுர மீற்றருக்கு 365 லிற்றர் என பதிவாகியிருந்தது. தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு, சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், நிலச்சரிவும் பதிவாகியுள்ளது.
காலையில் மட்டுமே மழை லேசாக குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சூரிச் பகுதிகளில் புயல் காரணமாக 200 தீயணப்பு மற்றும் மீட்புக்குழுவினரை இரவோடு இரவாக களமிறக்கியிருந்தனர்.
மேலும் 100கும் அதிகமான பகுதிகளில் மழை காரணமாக மீட்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரைனில் கப்பல் மற்றும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டன.
பலத்த மழையால் துர்காவ் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என தெரிய வந்துள்ளது.