தினமும் ஊறவைத்த 10 பாதாம்! கிடைக்கும் அதிகபட்ச நன்மைகள்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பாதாம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. தினசரி ஆரோக்கியத்தில் பாதாம் சேர்ப்பது உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.
பாதாம்பருப்பை சரியான முறையில் சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.
பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைப்பதன் மூலம் அவற்றில் இருந்து அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கிறது.
மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தவும், நொதி செயல்பாட்டை தூண்டவும் உதவுகிறது.
பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
பாதாம் பருப்பை ஊறவைக்காமல், உரிக்காமல், அப்படியே சாப்பிடுவது இரத்தத்தில் பித்தத்தின் அளவை அதிகரிக்கிறது.
எனவே பாதாமை ஊறவைத்து உண்ணுவது சிறந்தது. ஒரு நாளில் நீங்கள் சுமார் 10 பாதாம் சாப்பிடலாம்.
நன்மைகள்
பாதாமில் அதிகளவு நார்சத்து கொண்டுள்ளது, ஊறவைத்த பாதாம் பெரிஸ்டால்டிக் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.
இதனால் மலச்சிக்கல், அஜீரணம், வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகளை குறைக்கிறது. மேலும் செரிமான பிரச்சனைகளை சீராக்குகிறது, அடிக்கடி உண்டாகும் பசி உணர்வை தடுக்கவும் செய்கிறது. இதனால் எடை இழப்பிற்கு பெரிதும் உதவும்.
பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் பி 17 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை ஊற வைத்த பாதாமில் காணப்படுகின்றன, இது புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
பாதாமின் தோலில் டானின்கள் உள்ளன, அவை ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன.
பாதாம் பருப்பை ஊறவைத்தால், தோலை எளிதில் எடுத்து விடலாம். தோலை நீக்கி உண்டால் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |