அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனியாளாக போராடிய சோபனா: அரைசதம் அடித்து மிரட்டல்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் வங்காளதேசத்தின் சோபனா மோஸ்தரி அரைசதம் அடித்தார்.
சரிந்த விக்கெட்டுகள்
அவுஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடியது. ரூபியா ஹைதர் (Rubya Haider) அபாரமாக ஆடி 59 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் எடுத்தார்.
சோபனா மோஸ்தரி நிதானமாக ஓட்டங்களை எடுக்க, ஏனைய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
சோபனா மோஸ்தரி
எனினும், தனியாளாக போராடிய சோபனா மோஸ்தரி (Sobhana Mostary) கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டினார்.
இதன்மூலம் அரைசதம் அடித்த அவர், 80 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசினார். வங்காளதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்கள் எடுத்தது.
கார்ட்னர், அன்னபெல், அலனா கிங் மற்றும் ஜார்ஜியா வார்ஹம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Fighting fifty by Sobhana Mostary! ❤
— Female Cricket (@imfemalecricket) October 16, 2025
Her composed 66* anchors Bangladesh to a fighting 198! 👏#CricketTwitter #CWC25 #AUSvBAN pic.twitter.com/FtvM96Gk9Z
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |