16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை: பிரித்தானிய பிரதமர் அதிரடி
16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை
பிரித்தானிய அரசின் முக்கிய கொள்ளை முடிவாக 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா கடந்த ஆண்டு கொண்டு வந்த சமூக ஊடக தடை தொடர்பாக எடுத்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த முடிவும் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தடை நடவடிக்கையின் மூலம் குழந்தைகளின் மன மற்றும் உணர்வுபூர்வமான ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதை அரசாங்கம் தனது நோக்கமாக கொண்டுள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பேச்சு
சிறுவர்களுக்கான சமூக ஊடக தடை குறித்து பேசிய பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சமூக ஊடகங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியற்றவர்களாக மாற்றுவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் குழந்தைகள் எளிதில் கேலிக்கும், துன்புறுத்தலுக்கும் இதனால் ஆளாக்கப்படுகிறார்.

மேலும் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகே இந்த முடிவானது எடுக்கப்பட்டு இருப்பதாகவும். சமூக ஊடகங்கள் இளைஞர்களுக்கு வழங்கும் சாத்தியமான நன்மைகள் இருந்தாலும், அதனால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை அவசியம் என்று பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் நலனை பாதுகாப்பதற்கு முழுமையான தடை என்பதே சரியான தேர்வு என தனக்கு தெளிவாக தெரிவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |