கனடாவிலிருந்து இந்தியாவுக்கு... இளம் இசைக்கலைஞர்களின் வாழ்வை மாற்றிய சமூக ஊடகங்கள்
இந்தியாவிலிருந்து வந்த அழைப்பு ஒன்று கனடாவில் வாழும் இளம் இசைக்கலைஞர் ஹிதேஷ் ஷர்மாவை (25) ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தங்கள் நிறுவனத்தில் தனது பாடல் ஒன்றை வெளியிடுமாறு ஷர்மாவை கேட்டுக்கொண்டது சோனி மியூசிக் இந்தியா நிறுவனம்.
கனடாவின் Regina பகுதியில் வளர்ந்து, 12 வயது முதல் பாடல்கள் பாடி வரும் ஷர்மாவுக்கு தொடர்ந்து ஆச்சரியங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. தான் ரீமிக்ஸ் செய்து பாடிய ஹிந்திப் படப்பாடல் ஒன்று வைரலாகியுள்ளதை தற்செயலாக கண்டுபிடித்தார் ஷர்மா.
அந்த பாடல் மக்களின் கவனத்தை ஈர்த்ததால், Young Shahrukh என்ற பெயரில் அவர் ராப் செய்திருந்த மற்றொரு வீடியோவும் பிரபலமாக, அதை ஒரு மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தார்கள்.
அதற்குப் பிறகுதான் ஷர்மாவுக்கு சோனி மியூசிக் இந்தியா நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது.
ஷர்மாவைப் போலவே கனடாவிலிருந்து கவனம் ஈர்க்கப்பட்ட மற்றொரு பாடகி Jonita Gandhi.
கனடாவின் ரொரன்றோ பகுதியில் வளர்ந்த Jonita, இப்போது இந்தியாவுக்கே வந்துவிட்டார். மும்பையில் வாழும் அவர், தற்போது 10 இந்திய மொழிகளில் பாடி வருகிறார்.
வேறொரு நாட்டில் எங்கோ பாடிக்கொண்டிருந்த தங்களை, இன்று உலகம் அறியவைத்து பிரபலமாக்கிய பெருமை டிக் டாக் முதலான சமூக ஊடகங்களைத்தான் சாரும் என்கிறார்கள் இந்த இளம் கலைஞர்கள்.