X உள்ளிட்ட சமூக ஊடக தளங்கள் செயலிழப்பு: பயனர்கள் அவதி
உலகின் முன்னணி சமூக ஊடகத் தளமான X உள்ளிட்ட சில ஆன்லைன் சேவைகள் எதிர்பாராத விதமாக செயலிழந்துள்ளது.
செயலிழந்த X தளம்
சமூக ஊடக தளமான X மற்றும் இசை ஸ்ட்ரீமிங் தளமான Spotify மற்றும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ஆகிய இணையதள சேவைகள் எதிர்பாராத விதமாக ஒரே நேரத்தில் செயலிழந்ததால் இணையவாசிகள் இடையூறுகளை சந்தித்தனர்.
இந்த சேவை தடங்கல்கள் பேஸ்புக், அமேசான் வெப் சர்வீசஸ், கான்வா போன்ற பயன்பாட்டு தளங்களிலும் காணப்பட்டதாக Downdetector.com தகவலின்படி தெரியவந்துள்ளது.

10000க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த Cloudflare தொடர்பான சிக்கலை செவ்வாய்க்கிழமை காலையில் எதிர்கொண்டதாக Downdetector.com தெரிவித்துள்ளது.
சுமார் 11 மணிக்கு இடையூறுகள் தொடங்கிய நிலையில் X தளத்தில் சில சேவைகள் சிறிது நேரம் செயல்பட்டன. ஆனால் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட தொடங்கின.
Cloudflare நெட்வொர்க்கில் உள்ள சர்வர் பிழை தான் இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
Cloudflare இந்த சிக்கலை கண்டறிந்து அதற்கான சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |