ஜாக்கிரதை! பிரித்தானியா மக்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதால், மக்கள் வெளியே செல்லும் போது கவனமாக இருக்குமாறு பிரதமர் மற்றும் இங்கிலாந்து தலைமை மருத்துவ அதிகாரி வலியுறுத்திள்ளனர்.
பிரித்தானியாவில் புதன்கிழமை புதிதாக 78,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, நாட்டில் பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
இதனிடையே புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், Pubகள் மற்றும் உணவகங்களை மூட போவதில்லை, ஆனால், வெளியே செல்வதற்கு முன் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், மக்கள் முடிந்தவரை விரைவாக பூஸ்டர் டோஸ்களை செலுத்திக்கொள்ளுமாறு போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார்.
இந்நிலையில் அவசியமில்லாதவர்களை சந்திக்க வேண்டாம் என இங்கிலாந்து தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் Chris Whitty வலியுறுத்தியுள்ளார்.
ஒமிக்ரான் மாறுபாடு அதிகரித்து வருவதால் இதுவரை இல்லாத அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நாடு இரண்டு தொற்றுநோய்களை எதிர்கொண்டு வருவதாக பேராசிரியர் Whitty கூறினார், ஒன்று மிக வேகமாக பரவும் ஒமிக்ரான், மற்றொன்று டெல்டா மாறுபாடு என Chris Whitty கூறினார்.