கட்டாய ராணுவ சேவை அவசியம்: குரல் கொடுக்கும் ஜேர்மன் மாகாணமொன்று
ஜேர்மனியில் ராணுவ சேவையை கட்டாயமாக்குவது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
கட்டாய ராணுவ சேவை அவசியம்
இந்நிலையில், கட்டாய ராணுவ சேவை அவசியம் என்று கூறியுள்ளார் ஜேர்மன் மாகாண பிரீமியர் ஒருவர்.
ஆம், ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தின் பிரீமியரான மார்க்கஸ் (Markus Söder), ஜேர்மனியில் ராணுவ சேவையை கட்டாயமாக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
Frank Hammerschmidt/dpa/picture alliance
இளைஞர்கள் விரும்பினால் ராணுவத்தில் சேரலாம் என அரசு கூறியுள்ள நிலையில், அதெல்லாம் வேலைக்கு ஆகாது, கட்டாய ராணுவ சேவைதான் ராணுவத்தை வலுப்படுத்த சரியான திட்டம் என்று கூறியுள்ளார் அவர்.
ஜேர்மன் ராணுவம் ஐரோப்பாவிலேயே பெரிய ராணுவமாகவேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி கட்டாய ராணுவ சேவைதான் என்று கூறியுள்ளார் அவர்.
வெறும் தன்னார்வலர்களை நம்பி நம் நாட்டுக்குத் தேவையான பாதுகாப்பை அடையமுடியாது என்று கூறியுள்ள அவர், சுதந்திரம் வேண்டுமென்றால் பாதுகாப்பு வேண்டும் என்றும், அதனால், கூடிய விரைவில் கட்டாய ராணுவ சேவைகொண்டுவரப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார் மார்க்கஸ்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |