சோதியின் சுழலில் மொத்தமாக சரிந்த வங்கதேசம்! சொந்த மண்ணிலேயே மரண அடி கொடுத்த நியூசிலாந்து
டாக்காவில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
அணியை மீட்ட பிளெண்டெல்
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது போட்டி டாக்காவில் நடந்தது.
Twitter (@BLACKCAPS)
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடியது. முஸ்தபிஸுர், காலித் அகமது மிரட்டல் பந்துவீச்சில் 36 ஓட்டங்களுக்குள் நியூசிலாந்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
Twitter (@BLACKCAPS)
அதன் பின்னர் ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் டாம் பிளெண்டெல் இருவரும் கைகோர்த்தனர். 49 ஓட்டங்கள் சேர்த்த நிக்கோல்ஸ் விக்கெட் கீப்பர் லித்தன் தாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட சோதி
அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 10 ஓட்டங்களில் வெளியேற, அரைசதம் அடித்த பிளெண்டெல் 68 ஓட்டங்களில் அவுட் ஆனார். பொறுப்புடன் ஆடிய இஷ் சோதி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 39 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்தார்.
Twitter (@BLACKCAPS)
நியூசிலாந்து அணி 49.2 ஓவரில் 254 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. காலித் அகமது, மஹெடி ஹசன் தலா 3 விக்கெட்டுகளும், முஸ்தபிஸுர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில் தமிம் இக்பால் நிலைத்து நின்று ஆட, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
சுருண்ட வங்கதேசம்
அணியின் ஸ்கோர் 92 ஆக இருந்தபோது தமிம் இக்பாலை 44 ஓட்டங்களில் சோதி வெளியேற்றினார். அதன் பின்னர் சோதியின் மாயஜால சுழலில் வங்கதேச வீரர்கள் ஆட்டமிழந்தனர்.
Twitter (@BLACKCAPS)
மஹ்முதுல்லா மட்டும் 49 ஓட்டங்கள் எடுக்க வங்கதேச அணி 41.1 ஓவரில் 168 ஓட்டங்களுக்கு சுருண்டது. சோதி 6 விக்கெட்டுகளும், ஜேமிசன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
2 அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 26ஆம் திகதி நடைபெற உள்ளது.
Twitter (@BCBtigers)
Twitter (@BLACKCAPS)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |