ஆண்டுக்கு ரூ.28 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு தொடங்கிய தொழில்... தற்போது மாதம் 1 கோடி வருவாய்
பொறியியல் பட்டதாரியான ஒருவர் தமது நண்பர்கள் இருவருடன் இணைந்து நிறுவிய Country Chicken Co என்ற நிறுவனத்தால் தற்போது மாதம் ரூ.1 கோடி வரையில் வருவாய் ஈட்டி வருகிறார்.
Country Chicken Co
பொறியியல் பட்டதாரியான Saikesh Goud மென்பொருள் நிறுவனம் ஒன்றில் ஆண்டுக்கு ரூ.28 லட்சம் சம்பளத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஆனால் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற அவரது கனவு, இறுதியில் Country Chicken Co என்ற நிறுவனமூடாக சாத்தியமானது.
2009ல் Hemambar Reddy மற்றும் Mohd. Sami Uddin ஆகியோருடன் இணைந்து Country Chicken Co என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார் சாய்கேஷ் கவுட். மூவரும் தொடர்ந்து கடுமையாக உழைத்து ஒரு வருடத்திற்குள் தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினர்.
நாட்டுக் கோழி வர்த்தகத்தில் களமிறங்கியுள்ளதால், மக்களிடம் போதிய ஆதரவு கிடைக்காது என பலரும் இவர்களை கேலியும் செய்துள்ளனர். சாய்கேஷும் அவரது நண்பர்களும் இந்தியாவின் முதல் நாட்டு கோழி உணவகங்களை ஹைதராபாத்தில் குகட்பள்ளி மற்றும் பிரகதி நகர் பகுதியில் நிறுவினர்.
விவசாய மக்களிடம் இருந்து மட்டுமே
தங்கள் உணவங்களில் சுமார் 70 ஊழியர்களை வரையில் பணியில் அமர்த்தினர். அத்துடன், நாட்டு கோழி வளர்ப்பில் ஈடுபடும் சுமார் 15,000 பண்ணைகளுடன் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டனர்.
மட்டுமின்றி, விவசாய மக்களிடம் இருந்து மட்டுமே தங்களுக்கான நாட்டு கோழியை வாங்கவும் முடிவு செய்தனர். தற்போது நாட்டு கோழி வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரிய பயிற்சியும் அளிக்க முன்வந்துள்ளனர்.
மாதம் சுமார் 3 லட்சம் வருவாய் ஈட்டி வந்த நிறுவனம் தற்போது மக்கள் ஆதரவால் 1.2 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது. 2023- 2024ல் ரூ.50 கோடி வருவாய் என்ற இலக்குடன் Country Chicken Co தற்போது இயங்கி வருகிறது என சாய்கேஷ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |