ஒரு கைப்பிடி மண் இருந்தால் போதும்: தீரா சோகத்து தீர்வு இதுதான்
குடும்பத்தில் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் நிலைத்திருக்க குலதெய்வ வழிபாட்டினை நிச்சயம் செய்தாக வேண்டும்.
குலதெய்வ வழிபாடு இல்லாமல் எந்த தெய்வத்தை வணங்கினாலும் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கப்பெறாது என்பது ஐதீகம்.
குல தெய்வவழிபாட்டில் மிக முக்கியமான வழிமுறை ஒன்று உள்ளது, இதனை கடைப்பிடிப்பதன் மூலம் மென்மேலும் பயன்களை அடையமுடியும்.
மண் வழிபாட்டு வழிமுறை
குல தெய்வ வழிப்பாட்டினை முடித்து வீடு திரும்பும் போது ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிலும் மண்ணை குடும்ப தலைவன் தலைவி கையால் எடுத்து இரண்டையும் ஒரு மஞ்சள் நிற துணியில் முடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பூஜை அறையில் வைக்கும் முன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து அதனுடன் ஒரு செம்புத்தகட்டில் உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை எழுதி குறித்த பொருளை மண்ணோடு வைத்து மஞ்சள் துணையிலேயே முடிச்சு கட்டி வீட்டில் பத்திரமான ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.
இந்த பொருட்களாவன யார் பார்வைக்கும் தென்படாமல் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
இல்லையெனில் கொஞ்சம் உயரமாக வீடாக அமைந்திருந்தால் உள் பக்கத்தில் ஆணி அடித்து மாட்டி விட வேண்டும்.
மேலும் தினமும் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளும் போது ஊதுவத்தியை இந்த முடிச்சுக்கும் காண்பித்து விட வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் அவர்களுடைய குறை நிறை பரிகார திட்டங்கள் நிவர்த்தியடையும்.
மேலும் வருடத்திற்கு ஒரு முறை குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் புதிய மண்ணை எடுத்து வந்து இவ்வாறான முறையில் செய்த விடவேண்டும்.
அத்துடன் பழைய மண்ணை வீட்டின் மண் நில அமைப்பில் கொட்டி விடவேண்டும்.
வழிபாட்டின் பொருள்
இவற்றின் முக்கிய காரணமாக அமைவது தமது முன்னோர்களின் கால்தடம் பட்டிருப்பதனால் இவ்வாறான முறையை மேற்கொண்டால் அவர்களின் ஆசீர்வாதம் எமக்கு கிட்டுமென்பதே பொருளாகும்.
தினமும் வழிபாடு செய்துவிட்டு, அவரவர் வேலையை ஆரம்பித்தால் அந்த நாள் நல்லபடியாக அமையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |