சூரிய காந்தப் புயலால் உலகம் முழுவதும் இன்டர்நெட் முடங்க வாய்ப்பு! ஆய்வில் வெளிவந்த எச்சரிக்கை தகவல்
சூரிய காந்தப் புயலால் உலகம் முழுவதும் இணைய சேவை முற்றிலும் பாதிக்கப்படலாம் என்று ஆய்வொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
சூரிய காந்தப் புயல் என்பது 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடிய மிகவும் அரிதான நிகழ்வு. சூரியனில் இருந்து அதிக அளவில் காந்த துகள்கள் வெளியேறுவதே சூரிய காந்தப் புயல் என குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் மிகப்பெரிய சூரிய ஒளி நிகழ்வு 1859 முதல் 1921ஆம் ஆண்டு காலகட்டத்தில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதாவது தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழக்தின் உதவிப் பேராசிரியர் சங்கீதா அப்து ஜோதி சூரிய காந்தப்புயல் குறித்து ஆய்வு செய்துள்ளார்.
இவரது ஆய்வின் முடிவில் சூரிய காந்தப் புயலால் பெரிய அளவில் இணைய முடக்கம் ஏற்பட்டு இதன் பாதிப்பு சில மாதங்களுக்கு தொடரும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இணைய முடக்கத்தால் பில்லியன் டாலர் கணக்கில் இழப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2/ A Coronal Mass Ejection (CME) involves the emission of electrically charged matter and accompanying magnetic field into space. When it hits the earth, it interacts with the earth's magnetic field and produces Geomagnetically Induced Currents (GIC) on the crust.
— Sangeetha Abdu Jyothi (@sangeetha_a_j) July 29, 2021
[Image: pic.twitter.com/BO910bko5S