கடனுக்காக அலைந்தவர்... தாயாரின் நகைகளை விற்று உருவாக்கிய நிறுவனம்: இன்று ரூ 2000 கோடி மதிப்பு
தொழில் தொடங்க வங்கி தோறும் கடனுக்காக அலைந்த நபர், இறுதியில் தமது தாயாரின் நகைகளை விற்று உருவாக்கிய நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ 2000 கோடி.
Peerless காப்பீட்டு நிறுவனத்தில்
கொல்கத்தாவை சேர்ந்த சுபாசிஷ் சக்ரவர்த்தி என்பவர் தமது கடுமையான உழைப்பு மற்றும் காலத்திற்கு ஏற்ற சமயோசித முடிவால் உருவாக்கிய நிறுவனம் தான் DTDC.
ரசாயனத்தில் பட்டப்படிப்பை முடித்த சுபாசிஷ், பொருளாதார நிலை கருதி கல்லூரி காலகட்டத்திலேயே Peerless என்ற மாபெரும் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் 1981ல் பெங்களூருவில் தங்கள் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் சுபாசிஷை அங்குள்ள அலுவலகத்தில் அனுப்பி வைத்துள்ளது Peerless நிறுவனம். 1987 வரையில் அங்கு பணியாற்றிய சுபாசிஷ், அந்த வேலையை விட்டுவிட்டு, இரசாயன விநியோக வணிகத்தை நிறுவினார்.
ஆனால் அஞ்சல் சேவையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இவரது நிறுவனம் தோல்வி கண்டது. அப்போது தான் வாடிக்கையாளர்களுக்கும் அஞ்சல் சேவைக்கும் இடையே இருக்கும் இடைவெளியை அவர் கவனித்தார்.
இதுவே கூரியர் நிறுவனம் ஒன்றை நிறுவ திருப்புமுனையாக அமைந்தது. 1990 ஜூலை 26ம் திகதி DTDC என்ற கூரியர் நிறுவனத்தைத் தொடங்கினார். மிக விரைவிலேயே சிறிய நகரங்களில் கூரியர் சேவைகளுக்கான தேவை அதிகமாக இருப்பதை அவர் உணர்ந்தார்.
20,000 ரூபாய் முதலீட்டில்
உண்மையில் DTDC நிறுவனத்தை தொடங்கும் முன்னர் சுபாசிஷ் பெரும் சவால்களை எதிர்கொண்டார். கடன் வாங்க ஒவ்வொரு வங்கியாக அலைந்தார். இறுதியில் தாயாரின் நகைகளை விற்று, தமது தொழிலை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
வெறும் 20,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட DTDC நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ 2,000 கோடி என்றே கூறப்படுகிறது. தற்போது இந்தியா முழுக்க 14,000 அஞ்சல் குறியீடு இலக்கங்களில் DTDC நிறுவனம் சேவையாற்றி வருகிறது.
மட்டுமின்றி சர்வதேச அளவில் 220 பகுதிகளுக்கு தங்கள் சேவையை DTDC வழங்கி வருகிறது. 2006ல் ரூ 125 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 2010ல் அது ரூ 450 கோடி என அதிகரித்துள்ளது. 2015ல், DTDC நிர்வாகம் ஹைதராபாத்தில் ஒரு தானியங்கி தளவாட மையத்தை நிறுவியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |