இணையத்தில் மகளின் ஆபாச காணொளி: தட்டிக்கேட்ட ராணுவ வீரரை ஒரு குடும்பமே அடித்துக் கொன்ற கொடூரம்
இந்திய மாநிலம் குஜராத்தில் மகளின் ஆபாச காணொளி தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்த ராணுவ வீரர் அடித்தே கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆபாச காணொளி
இந்த இரு விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தின் சக்கலாசி கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுவனே தொடர்புடைய ஆபாச காணொளியை இணையத்தில் பகிர்ந்துள்ளான்.
இச்சம்பவம் அறிந்த சிறுமியின் தந்தை, ராணுவ வீரரான அவர் சனிக்கிழமை சக்கலாசி கிராமத்திற்கு சென்று அந்த சிறுவனிடம் விசாரித்துள்ளார். ஆனால் சிறுவனின் குடும்பமே ஒன்று திரண்டு அந்த ராணுவ வீரரை அடித்தே கொன்றுள்ளது.
இராணுவ வீரர் அடித்துக் கொலை
ராணுவ வீரரின் மகளும் அந்த சிறுவனும் ஒரே பள்ளியிலேயே பயின்று வருகின்றனர். மட்டுமின்றி இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. காதல் விவகாரம் தொடர்பில் ராணுவ வீரர் குடும்பத்துக்கு தெரியவர, இது தொடர்பில் சிறுவனின் வீட்டாரிடம் சென்று பேசியுள்ளனர்.
ஆனால் அதன் பின்னரே, சிறுமி தொடர்பில் ஆபாச காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே ராணுவ வீரரை சிறுவனின் குடும்பம் ஒன்று திரண்டு அடித்துக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.