தலைமுடியை வெட்டி வீசிய பிரஞ்சு பிரபலங்கள்: ஈரானில் போராடும் மக்களுக்கு ஆதரவு
பிரான்சின் முன்னணி நட்சத்திரங்கள் ஈரானிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் தலைமுடியை வெட்டியுள்ளனர்.
அவர்களின் தைரியமும் கண்ணியமும் நம்மை அதற்கு கட்டாயப்படுத்துகிறது, பெண்கள் நமது ஆதரவைக் கேட்கிறார்கள்.
ஈரானில் ஹிஜாப் உடை தொடர்பில் வெடித்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரபல பிரஞ்சு நட்சத்திரங்கள் தங்கள் தலை முடியை வெட்டி வீசியுள்ளனர்.
ஆஸ்கார் விருது வென்ற நடிகர்கள் Marion Cotillard மற்றும் Juliette Binoche உட்பட பிரான்சின் முன்னணி நட்சத்திரங்கள் ஈரானிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
@reuters
தலைமுடியை வெட்டிய வீசிய Juliette Binoche விடுதலைக்கான தமது ஆதரவு இதுவென குறிப்பிட்டுள்ளார். ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
ஈரானின் கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி 22 வயதான மஹ்சா அமினி செப்டம்பர் 13 அன்று தெஹ்ரானில் கைது செய்யப்பட்ட பின்னர் இறந்த நிலையிலேயே போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதனைத்தொடர்ந்து ஈரானிய பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டி வீசுவதுடன், ஹிஜாப் உடைகளை தீ வைத்தும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே நடிகர்கள் Marion Cotillard மற்றும் Juliette Binoche உட்பட பிரான்சின் முன்னணி நட்சத்திரங்கள் டசின் கணக்கானோர் ஈரானிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் தலைமுடியை வெட்டியுள்ளனர்.
@reuters
மேலும், இந்த பெண்கள், இந்த ஆண்கள் நமது ஆதரவைக் கேட்கிறார்கள். அவர்களின் தைரியமும் கண்ணியமும் நம்மை அதற்கு கட்டாயப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
ஈரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களில் இதுவரை 130 பேர் பொலிசாரின் வன்முறைகளுக்கு பலியாகியுள்ளனர்.
மேலும், ஈரானிய மக்களுக்கு ஆதரவாக லண்டன், பாரிஸ், ரோம் மற்றும் மாட்ரிட் நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதுடன் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.