உறைந்த ஏரியில் சிறுவர்களுக்கு ஏற்பட்ட துயரம்: மரண காரணம் வெளியானது
பிரித்தானியவில் சோலிஹல் பகுதியில் உறைந்த ஏரியில் தவறி விழுந்த சிறுவர்கள் நால்வர் குளிர்ந்த நீரில் மூழ்கி தத்தளித்ததாக விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மரண காரணம்
குறித்த விபத்தில் சகோதரர்கள் இருவர் மரணமடைந்துள்ளதுடன் இவர்களின் உறவினர்கள் இருவரும் அந்த விபத்தில் மரணமடைந்துள்ளனர்.
இந்த நால்வரும் கடந்த ஞாயிறன்று உறைந்த அந்த ஏரியின் மீது விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவகையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
@getty
சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் தரப்பு, சுமார் 22 நிமிடங்களுக்கு பின்னர் 3 சிறுவர்களை தண்ணீரில் இருந்து மீட்டுள்ளனர். ஒரு சிறுவன் சுமார் 31 நிமிடங்களுக்கு பின்னரே ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளான்.
துயரமான பேரிடர்
இந்த நால்வரில் மூவர் திங்களன்று மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நான்காவது சிறுவன் புதன்கிழமை மரணமடைந்துள்ளான்.
@BPM
சிறார்கள் நால்வருக்கும் ஏற்பட்ட இந்த முடிவானது துயரமான பேரிடர் என மூத்த விசாரணை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நீரில் மூழ்கி தத்தளித்து, துயரமான முடிவை நால்வரும் எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சிறார்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு துக்கத்தில் பங்கேற்றனர்.
Credit: SWNS