இந்த வாரம் சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் சில மாற்றங்கள்
ஜூன் மாதம் பிறந்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் சில மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன. அவற்றில் சில இங்கு கொடுக்கப்பட்டுள்ளன...
கொரோனா சான்றிதழை தயார் செய்வதன் இறுதிகட்ட பணிகள் சுவிட்சர்லாந்தில் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன.
அந்த கொரோனா சான்றிதழ், ஜூன் 7 முதல் படிப்படியாக ஒவ்வொரு மாகாணமாக அறிமுகம் செய்யப்படும் என தேசிய சைபர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
UBS வங்கியில் ஏடிஎம்மில் பணம் எடுப்பதில் மாற்றம் இதுவரை தங்கள் வங்கியுடையதல்லாத வேறு ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்காத வங்கிகளில் UBS வங்கி ஒன்றாக இருந்த நிலையில், இன்று முதல் வேறு ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு இரண்டு சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் விதிக்கப்பட உள்ளது.
மேலும் அண்மை நாடுகள் பலவற்றிலிருந்து இத்தாலிக்கு செல்ல அனுமதி இல்லாத
நிலையில், இந்த வாரத்திலிருந்து டிசினோ மாகாணத்தில் வாழ்பவர்கள் மட்டும்,
ஷாப்பிங் செய்வதற்காக இத்தாலிக்கு செல்ல அனுமதியளிக்கப்படுகிறது.