விலைவாசி காரணமாக மற்றொரு நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் ஜேர்மன் முதியவர்கள்
Some elderly Germans are moving to Czech care homes: ஜேர்மன் நாட்டு முதியவர்கள் சிலர் செக் குடியரசிலுள்ள முதியோர் காப்பகங்களில் சேர்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
ஜேர்மன் நாட்டு முதியவர்கள் சிலர் செக் குடியரசிலுள்ள முதியோர் காப்பகங்களில் சேர்க்கப்படுவது அதிகரித்தவண்ணம் உள்ளது.
விலைவாசி காரணம்
அதாவது, ஜேர்மனியிலுள்ள முதியவர்களை கவனித்துக்கொள்ளும் காப்பகங்களுக்கான கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஜேர்மனியிலுள்ள நர்ஸிங் ஹோம்களில், முதியவர்களை கவனித்துக்கொள்வதற்கு மாதம் ஒன்றிற்கு 3,200 முதல் 3,400 யூரோக்கள் வரை ஆகிறதாம்.
ஆகவே, பலர் தங்கள் வயது முதிர்ந்த உறவினர்களை செக் குடியரசிலுள்ள முதியோர் காப்பகங்களில் சேர்ப்பது அதிகரித்துவருவதாக ஜேர்மனியின் Deutsche Welle ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
நல்ல கவனிப்பு, குறைவான கட்டணம், குறைந்த கட்டணத்தில் கூடுதல் சிகிச்சைகள் முதலான விடயங்கள் செக் குடியரசில் கிடைப்பதால், ஜேர்மானியர்கள் வயது முதிர்ந்த தங்கள் உறவினர்களை அங்குள்ள நர்ஸிங் ஹோம்களில் சேர்க்கிறார்கள்.
விடயம் என்னவென்றால், அதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. அதாவது, ஜேர்மன் மொழி பேசும் பணியாளர்கள் பற்றாக்குறை, காப்பகங்களில் அனுமதி கிடைக்க நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய நிலை மற்றும், அந்த முதியவர்கள் தங்கள் வயதான காலத்தில் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து இன்னொரு நாட்டில் வாழவேண்டிய நிலை ஆகிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.